செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 டிசம்பர் 2017 (13:40 IST)

குழந்தை பெற்றெடுத்த ஆண்; ருசிகர சம்பவம்

இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய பெண் ஒருவர்  அழகான குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இச்சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பியோனிஸ் நகரை சேர்ந்த பெண் கச்சி சுல்லிவான். இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
 
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய கச்சி சுல்லிவான், ஸ்டீவென் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கச்சி சுல்லிவான் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் கர்ப்பம் அடைந்து  சில நாட்களுக்கு முன்பு ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்தார். 
 
இதன்மூலம் பெண்ணாகவும், ஆணாகவும் இருந்து குழந்தை பெற்ற முதல் நபர் என்ற பெருமையை கச்சி சுல்லிவான் பெற்றுள்ளார்.