செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 14 டிசம்பர் 2017 (20:34 IST)

லேசர் கொண்டு நுரையீரலில் பெயரை அச்சிட்ட டாக்டர்....

இங்கிலாந்தில் மருத்துவர் ஒருவர் லேசர் கொண்டு நோயாலியின் நுரையீரலில் தனது பெயரை அச்சிட்ட சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இங்கிலாந்தை சேர்ந்த சைமன் பிரேம்ஹால் நோயாளிகளின் நுரையீரலில் பெயரை அச்சிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு, சைமன் பிரேம்ஹால் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார். 
 
அந்த அறுவை சிகிச்சையின் போது மயக்க நிலையில் இருந்த நோயாளிகளின் நுரையீரல்களில் இரத்த நாளங்களை ஒட்டப் பயன்படுத்தப்படும் லேசர் கருவியை கொண்டு தனது பெயரின் முதல் எழுத்துக்களை அச்சிட்டுள்ளார்.
 
தற்போது அறுவைசிகிச்சை செய்து கொண்ட இருவரில் ஒருவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நுரையீரலில் டாக்டரின் பெயர் அச்சிட்டிருப்பதை கண்ட மற்ற மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இதனையடுத்து, மருத்துவர் சைமன் பிரேம்ஹால் மீது இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.