செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (14:33 IST)

அமெரிக்காவில் பிரபல பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வெடிப்பு?

america
சமீபகாலமாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவிலுள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் அருகில் வெடிகுண்டு போன்ற பொருள் வெடித்துள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில்  உள்ள பல்கலைக்கழகத்திற்கு அருகே ஒரு வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் பாஸ்டனில் நகரில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு வெடி சத்தம் கேட்டு, மாணவகள் வகுப்பறையில் இருந்து பதறியடித்து ஓடினர்.

இந்த வெடி விபத்தில் பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து பல்கலைக்கழகத்திற்கு விரைந்து வந்த எஃப்.பி.ஐ அதிகாரிகள் வெடிகுண்டு சிதறிய மர்ம பொருள் குறித்து ஆய்வு  செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ச்