1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (09:11 IST)

90 வயசு கிழவரையும் 26 வயது இளைஞனா மாற்றும் மருந்து! – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

Age tranformatio
முதியவர்களையும் இளைஞர்களாக மாற்றும் புதிய மருந்தை கண்டுபிடித்து உள்ளதாக கலிபொர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது.



மனித சமூகமே கண்டு அஞ்சும் ஒன்று மரணம். மரணம் இல்லா வாழ்வு சாத்தியமா என்ற ஆராய்ச்சிகள் ஒருபக்கம் நடந்து வரும் நிலையில், உடல் உறுப்புகள் மாற்று சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு மருத்துவத்துறையும் பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது.

தற்போதைய சூழலில் பெரும்பான்மையான வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆனால் முதுமை அடைவதை தடுக்க எந்த மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அதற்கான ஆய்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றது. அப்படியாக கலிபொர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டு வரும் ஆய்வில், பன்றி ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மற்றும் நானோ துகள்களை கொண்டு E5 எனப்படும் வயது எதிர்ப்பு சிகிச்சையை எலிகளுக்கு செய்து பார்த்துள்ளனர்.

எலிகளின் வயதை குறைக்கும் இந்த சோதனை 70 சதவீதம் வெற்றி அடைந்துள்ளதாகவும், மனிதர்கள் மீது சோதித்தால் 80 சதவீதம் வரை வெற்றி பெறும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த சோதனை வெற்றி பெற்றால் 90 வயது முதியவரையும் 26 வயது இளைஞராக மாற்ற முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K