''மிஸ் பாப்புலர் வேல்ர்ட் விருது ''வென்ற நமீதாவுக்கு வாழ்த்துகள் கூறிய அமைச்சர் சுப்ரமணியன்
தமிழகத்தைச் சேர்ந்த திரு நங்கை நமீதா தாய்லாந்தில் நடந்த மிஸ் குயீன் 2022 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அமைச்சர் சுப்பிரமணியம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த திருநங்கை நமீதா ஸ்பெயின் நாட்டில் நடந்த மிஸ் டிரான்ஸ் ஸ்டோர் இன்டர் நேசனல் 2020ல் விருது பெற்றார். சென்னை, பாண்டிச்சேரி, மிஸ் இந்தியா போன்ற பல்வேறு அழகிப் போட்டிகளில் பட்டம் வென்றார்.
இந்த நிலையில், தற்போது தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் பாப்புலர் அஃப் தி வேர்ல்ட் -2022 என்ற விருதை பெற்றுள்ளார் திரு நங்கை நமீதா.
இதுகுறித்து அமைச்சர் சுப்பிரமணியமன் தன் டுவிட்டர் பக்கத்தில், தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற MISS QUEEN 2022 நிகழ்ச்சியில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை நமீதா அவர்கள் தமிழக அரசின் நிதியுதவியுடன் பங்குபெற்று MISS POPULAR OF THE WORLD பெற்றதற்கு வாழ்த்து பெற்றார் என்று பதிவிட்டுள்ளார்.
Edited by Sinoj