1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 17 டிசம்பர் 2022 (21:33 IST)

சிலியில் திடீர் காட்டுத்தீயில் 7 ஆயிரம் ஹெக்டேர் எரிந்து நாசம்

sili  fire
சிலி நாட்டில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயில் 7 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் எரிந்து போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிலி நாட்டின் வால்பரைசோ என்ற பகுதியில் சில நாட்களுக்கு முன்பு காட்டு தீ பரவியது. இது இன்று வரை  அணையாமல் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.

இதனால், அங்குள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் தீயில் எரிந்து போயுள்ளன. மட்டுமின்றி, அப்பகுதி  முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன.

இந்த நிலையில்,  வெப்ப அலைகளினால் இந்தக் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாகவும், இந்தகத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும் மீட்புப் படையினரும் களமிறங்கியுள்ளனர்.

இதுவரை, இந்தக் காட்டுத் தீயில் சுமமார் 7 ஆயிரம் ஹெக்டேர் எரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்பகுதியில் உள்ள மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.