திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 8 நவம்பர் 2017 (18:23 IST)

டிரம்ப் மகள் வருகை எதிரொலி: ஐதராபாத் போலீஸ் விதித்த அதிரடி தடை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை ஐதராபாத் நகரில் நடைபெறும் சர்வதேசத் தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். இவரது வருகையை ஒட்டி தற்போது முதலே ஐதராபாத் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன


 


இந்த நிலையில் ஐதராபாத் போலீசார் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன்படி நவமபர் 7 முதல் 2018 ஜனவரி 7-ம் தேதி ஐதராபாத்தில் பிச்சை எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2000ஆம் ஆண்டு ஐதராபாத்துக்கு முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வருகை தந்தபோதும் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.