வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2020 (11:15 IST)

ஊரடங்கால் சண்டை நடக்கும்! இல்லைன்னா அது நடக்கும்! – ஐ.நா அதிர்ச்சி ரிப்போர்ட்!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகலாம் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் இதன் தாக்கம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில் உலகம் முழுவதிலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கருத்தடை சாதனங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையால் சுமார் 4 கோடியே 70 லட்சம் பெண்களுக்கு கருத்தடை சாதனங்கள் கிடைக்காத நிலை ஏற்படும். இதனால் எதிர் வரும் மாதங்களில் 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும் என அந்த அமைப்பு கூறியுள்ளது.

மேலும், ஆண்களும் பெண்களும் வீட்டிலேயே இருப்பதால் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 6 மாதங்களில் 3 கோடியே 10 லட்சம் மோதல் சம்பவங்கள் நடக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு கால கட்டத்தில் குழந்தை திருமண சம்பவங்கள் நடைபெறலாம் எனவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.