1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2020 (19:38 IST)

வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பலாம்! மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநில தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு நடைபயணமாக சென்றது சர்ச்சைகளைக் கிளப்பியது. மேலும் மும்பை ரயில் நிலையம் அருகே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதும் சர்ச்சையைக் கிளப்பியது.

இப்போதைக்கு ஊரடங்கு நீக்கப்பட வாய்ப்பில்லை என்பதால் வெளி மாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதன் படி தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டவர்கள் அவரவர் மாநிலங்களுக்குத் திரும்ப அனுமதி அளிக்கப்படுகிறது. மாநில அரசுகளால் நியமிக்கப்படும் அதிகாரிகள்  குழுவின் பரிந்துரையின் படி பேருந்துகளில் சமூக இடைவெளியோடு அவர்கள் கொரோனா சோதனை செய்து அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த மாநிலங்களுக்கு சென்றதும் அவர்களை அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதித்து அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தப் படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.