வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 16 பிப்ரவரி 2019 (13:28 IST)

பாலியல் புகாரில் சிக்கிய பிரபல பாடகர்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல் பாடகர் ரியான் ஆடம்ஸ் மீது பல பெண்கள் பாலியல் புகார் கூறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவை சேர்ந்தவர் ரியான் ஆடம்ஸ். 44 வயதாகும் இவர் அமெரிக்காவின் பிரபல பாடகராவார். பாடகர் மட்டுமில்லாது இவரிடம் பல்வேறு திறமைகள் இருக்கிறது. இவருக்கு  மாண்டி மூரே என்ற பாடகியுடன் திருமணமாகி பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில் ரியான் மீது மாண்டி உட்பட 6 பெண்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். இதற்கு விளக்கமளித்துள்ள ரியான் நான் ஒன்னும் நியாயமான மனிதன் கிடையாது. பல தவறுகளை செய்துள்ளேன்.
 
ஆனால் என் மீது தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஒரு போதும் ஒப்புக்கொள்ளமாட்டேன். என் பெயரை கலங்கடிக்கவே இப்படி பலர் செய்கின்றனர் என கூறியுள்ளார்.