புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 9 பிப்ரவரி 2019 (19:17 IST)

கொலை மிரட்டல் விடுத்தார் கருணாகரன்: கமிஷ்னர் அலுவலகத்தில் இயக்குனர் புகார்

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பொதுநலன் கருதி பட இயக்குநர் மற்றும் இணை தயாரிப்பாளர் ஆகியோர்  நடிகர் கருணாகரன் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார்கள். 
 
சீயோன் இயக்கத்தில் கடந்த 7-ம் தேதி வெளியான படம் பொது நலன் கருதி. இந்தப் படத்தில் நடிகர் சந்தோஷ், அருண் ஆதித், கருணாகரன், அனுசித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
இந்நிலையில் இயக்குனர் சீயோன், படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர்.
 
அந்தப் புகாரில் கருணாகரன் படத்தில் நடிக்க ரூ. 25 லட்சம் முழுமையாக பெற்றுக்கொண்ட பிறகு பின்னணி குரல் கொடுத்தார். ஆனால் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் புரமோஷன் உள்ளிட்டவற்றிற்கு அழைத்த போது வரவில்லை.
 
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இயக்குநர் சீயோன் கருணாகரன் வராதது குறித்து வருத்தம் தெரிவித்தார். இதற்காக இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்திற்கும் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
 
இயக்குநர் சீயோன் செய்தியாளர்களை சந்திக்கும்போது, ஏற்கனவே கந்துவட்டிக்காரர்களால் படத்தை வெளியிட சிக்கல்களை சந்தித்த தாங்கள்ளை கந்து வட்டிக்காரர்கள் மிரட்டும் தொனியில் கருணாகரன் மிரட்டுவதாக வேதனை தெரிவித்தார்.