புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 பிப்ரவரி 2019 (15:48 IST)

சீரியல் பார்த்துவிட்டு இளம்பெண்ணை சீரழித்த இரண்டு பொண்டாட்டிகாரன்

புதுச்சேரியில் பெயிண்டர் ஒருவன் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
புதுச்சேரி வானரப்பேட்டையை சேர்ந்தவர் வின்செண்ட்(39). இவன் ஒரு பெயிண்டர். இவனுக்கு இரண்டு மனைவிகளும் குழந்தைகளும் உள்ளனர்.
 
இந்நிலையில் சமீபத்தில் ஒருவரின் வீட்டிற்கு வின்செண்ட் சென்றுள்ளான். அங்கு இளம்பெண் ஒருவர் இருந்திருக்கிறார். அவர்களின் வீட்டில் யாருமில்லாததை அறிந்த வின்செண்ட், அந்த பெண்ணிடம் சீரியல் பார்த்துவிட்டு செல்வதாக கூறியிருக்கிறான்.
 
அந்த பெண்ணும் சரி என கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுள்ளார். அந்த பெண்ணை பின்தொடர்ந்து அவரின் அறைக்கு சென்ற வின்செண்ட் பெண்ணை மிரட்டி கற்பழித்துள்ளான்.
 
இதுகுறித்து அந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் அந்த அயோக்கியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.