ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 23 ஜனவரி 2019 (15:57 IST)

ரூ.4,62,49,03,172 கோடி லாபம் இல்ல அபராதம்: திக்குமுக்காடும் கூகுள்!

ஐரோப்பாவின் பொது தகவல் பாதுகாப்பு கட்டுப்பாடு விதிகளை மீறியதாக குறிப்பிட்டு கூகுள் நிறுவனத்தின் மீது பிரான்ஸ் அரசு ரூ.4,62,49,03,172 கோடி அபராதம் விதித்துள்ளது. 
 
பொதுத் தரவுகள் பாதுகாப்பு நெறியாண்மை (General Data Protection Regulation) என்ற புதிய சட்டத்தை ஐரோப்பா அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தனிநபர்களின் அந்தரங்க உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
 
அதாவது இந்த சட்டத்தை பின்பற்றும் போது ஒருவரை பற்றிய டேட்டாக்கள் திருடப்பட்டாலும் அந்த தகவல்கள் எங்கு, எதற்கு பயன்படுத்தப்பட்டன என்பதை தனிநபர்கள் தெரிந்துக்கொள்ள முடியும். 
இந்நிலையில் பயனரின் தகவல்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்றும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்ற விவரங்களை கூகுள் வழங்காத காரணத்தால் ரூ.4,62,49,03,172 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
 
கூகுள் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டிற்கும் அபராதத்திற்கும் பற்றி கூகுள் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.