வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (15:40 IST)

டிரம்பிற்கு மூக்கு உடைப்பு; ஈரானுடன் வர்த்தகம்: அதிரடி காட்டும் உலக நாடுகள்!

2015 ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபராக் இருந்த பராக் ஒபாமா தனது ஆட்சிக் காலத்தில் ஈரான் உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுடன் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 
 
ஆனால், அவரது பதவிக்காலம் முடிந்து டிரம்ப் பதவியேற்றதும் இது பைத்தியக்காரத்தனமான ஒப்பந்தம் என்று கூறி அதில் இருந்து விலகினார். மேலும், ஈரான் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தார். 
 
மேலும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தரப்பில் மிரட்டலும் விடப்பட்டது. 
 
இது குறித்து இந்தியா இன்னும் எந்த முடிவையும் எடுக்காத நிலையில், அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளையும் மீறி ஈரானுடன் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட ஐந்து நாடுகள் முடிவு செய்துள்ளன.
 
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஈரானுடன் வர்த்தகத்தை தொடருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதனால், இந்நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.