1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 அக்டோபர் 2020 (07:21 IST)

உலக கொரோனா நிலவரம்: பாதிப்பு 4.06 கோடி, பலி 11.22 லட்சம்

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.06 கோடியைத் தாண்டியுள்ளது.
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,635,300 என உயர்ந்துள்ளது.
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 30,347,651 என்பதும், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,164,891 என்பதும், பலியானோர் எண்ணிக்கை 1,122,758 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கொரோனா வைரஸால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,456,653 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 225,222 என்பதும், குணமானோர் எண்ணிக்கை 5,503,268 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,594,736என்பதும் பலியானோர் எண்ணிக்கை 115,236 என்பதும், குணமானோர் எண்ணிக்கை 6,730,617 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கொரோனா வைரஸால் பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,251,127 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 154,226 என்பதும், குணமானோர் எண்ணிக்கை 4,681,659 என்பதும் குறிப்பிடத்தக்கது