புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 25 ஏப்ரல் 2018 (12:45 IST)

ஆசிட்டில் முக்கி 3 மாணவர்கள் படுகொலை

மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பல் 3 மாணவர்களை கடத்தி அவர்களை ஆசிட்டில் முக்கி படுகொலை செய்த செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் மெக்சிகோவில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடத்தப்பட்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், போலீஸார் தீவிர விசாரனை நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில் அந்த கொடூர கடத்தல்காரர்கள், கடத்திய 3 மாணவர்களையும் ஆசிட் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்துள்ளனர். தற்பொழுது போலீஸார் மாணவர்களின் உடலை கைப்பற்றியுள்ளனர். மேலும் மாணவர்களின் உடல்களை டி.என்ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.