திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (20:59 IST)

116 ரன்களுக்கு ஆல் அவுட்; எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான்

ஆசிய கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் முதல் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

 
ஆசிய கோப்பை தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் வங்காளதேச அணி இலங்கை அணியை வீழ்த்தி அசத்தியது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் விளையாடி வருகிறது.
 
டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.