திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 24 செப்டம்பர் 2022 (18:37 IST)

சென்னை ஏர்போர்ட்டில் அஜித் -மஞ்சு வாரியார் !வைரல் வீடியோ

ajith manju warrior
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார்.இவர் தற்போது, ஹெச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில், துணிவு என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்தின் ஷீட்டிற்கு சில நாட்களுக்கு முன்னதாக இடைவெளி விடப்பட்ட நிலையில்,  நடிகர் அஜித்குமார்- மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர், வட மாநிலங்களில் உள்ள முக்கிய சுற்றுலாதளங்களுக்கு பைக்கில் சென்றனர்.

இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த நிலையில், முன்னறிவிப்பு இன்றி, அஜித்61 பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் ரிலீசாகி ர்சிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


இந்த நிலையில்,  துணிவு#Thunivu பட ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக தெரிகிறது. இன்று காலையில், நடிகர் அஜித்குமார், மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் சென்னை விமான நிலையத்திற்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.