செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 15 மே 2021 (08:39 IST)

ஒலிம்பிக்கை ரத்து செய்… பெருகும் எதிர்ப்புக்குரல்கள்!

ஜப்பானில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வேண்டுமென்று உலகம் முழுவதும் இருந்து குரல்கள் எழுந்துள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யவேண்டும் என எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. இதற்கான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 3. 5 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஒலிம்பிக் நடக்க இருக்கும் ஜப்பானிலும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு எதிராகவே மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.