ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2024 (16:01 IST)

வாரத்திற்கு 250 நோயாளிகள் மரணம்... அதிர்ச்சி தகவல்

hospital
இங்கிலாந்து நாட்டில் நீண்ட நேரம் சிகிச்சை கிடைக்காமல் வரிசையில் காத்திருந்ததால் கடந்த ஆண்டு வாரத்திற்கு  268 பேர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகிறது.
 
இங்கிலாந்து நாட்டில் அவரச கால சிகிச்சை கிடைக்காமல்  நோயாளிகள் உயிரிழப்பது பற்றி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
 
இதில், அவசர சிகிச்சை கிடைக்காமல் கடந்த ஆண்டு வாரம் ஒன்றிற்கு சராரியாக 268 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.
 
இதுகுறித்து அவரச காலத்திற்கான ராயல் கல்லூரி ஆய்வு செய்தது.
 
இந்த விவரங்களை இங்கிலாந்து தேசிய சுகாதார சேவைத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அந்த வார்டிற்கு வெளியே நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையுள்ளது. இப்படி காத்திருக்கும் நேரம் அதிகரித்தும், உரிய நேர்த்தில் சரியான சிகிச்சை கிடைக்காததாலும்  கடந்த ஆண்டு மட்டும் வாரத்திற்கு 268 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிறது.
 
மேலும் நடப்பாண்டு பிப்ரவரியில் இங்கிலாந்து மருத்துவமனைகளின் அவசர பிரிவில் 12 மணி நேரத்திற்கும் கூடுதலாக காத்திருந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரம் எனவும் இது கடந்த 2023 ஆம் ஆண்டில் 15 லட்சம்  நோயாளிகள் என தகவலும் வெளியாகிறது.