திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 செப்டம்பர் 2018 (11:34 IST)

போதை தலைக்கேறியதால் இளம்பெண் பரிதாப மரணம்

ஆஸ்திரேலியாவில் அளவுக்கு அதிகமாக போதை மாத்திரை உட்கொண்டதால் இளம்பெண் உட்பட ஒரு வாலிபர் மரணமடைந்துள்ளனர்.
இன்றைய இளம்தலைமுறையினர் பலர் போதைக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையையே கெடுத்துக் கொள்கின்றனர். சில அயோக்கிய கும்பல்கள் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்க போதை பொருட்களை சப்ளை செய்வதை முழு வேலையாக செய்து வருகின்றனர். அவர்களின் பணத்தாசையால் பலரது குடும்பங்கள் கெட்டுச் சீரழிந்து வருகிறது.
 
ஆஸ்திரேலியாவில் தற்பொழுது இசைத்திருவிழா நடைபெற்று வருகிறது. இதனைக் காண பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிகின்றனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலர் போதை மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் போதையிலே மிதந்தனர். அவர்களில்  23 வயதான ஒரு ஆணும், 21 வயதான ஒரு பெண்ணும் அளவுக்கு அதிகமாக போதை மருந்து உட்கொண்டதால் பரிதாபமாக பலியாகினர்.
 
போதை தலைக்கேறிய நிலையில் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். போதையால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.