வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 15 செப்டம்பர் 2018 (16:12 IST)

பாம்பு விஷம் கூடவா போதை தரும்?

உலகிலேயே அதிக விஷத்தன்மை வாய்ந்த பாம்புவகை தான் இந்த ராஜ நாகம்.

இது ஒரு முறை கடித்தால் இருபது பேரை கொல்லும் அளவுக்கு அதன் உடலில் விஷம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆயினும் அதைக் குறித்த செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் பஞ்சமே இருந்ததில்லை.அப்படித்தான் தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவிலுள்ள வட மாநிலமான ராஜஸ்தானில் இரு பணக்கார இளைஞர்கள் போதைக்கு வேண்டி உயிரைக் கொல்லும் ராஜ பாம்புவின் நஞ்சுக்கு அடிமையாகியுள்ளனர் என்கிற ஆரய்ச்சியாளர்களின் தகவல் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

ஆனால்  கடந்த சில நாட்களுக்கு முன் நம் இந்திய மாணவர்கள் சிலர் பாம்புக் கடிக்கு மிகக் குறைந்த விலையில் மருந்து கண்டுபிடித்து சாதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடுகிற பாம்பை மிதித்து துள்ளு குட்டிகளாக இருக்க வேண்டியது இந்த இளைய வயது. இந்த வயதில்  எந்த தொலைநோக்கும் இல்லாமல்  சுற்றித்திரியும் இளைஞர்கள் இனியாவதும் சிந்தித்து செயல்பட வேண்டும்.