ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (19:46 IST)

கோவாவில் தொடரும் அரசியல் பதற்றம் - முதல்வர் மனோகர் பாரிக்கரின் தற்போதைய நிலை என்ன?

முதல்வரை நேரில் சென்று  நலம் விசாரித்து வந்த கோவா மாநில துணை சபாநாயகரும் பாஜக எம்எல்ஏ-வுமான மைக்கேல் லோபோ   மனோகர் பாரிக்கர் நலமுடன் உள்ளதாக கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம் கணைய அழற்சி காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனை மற்றும் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்(62) பின்பு மார்ச் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரையிலும் உடல்நலம் தொடர்பாக சிகிச்சை பெறுவதற்காக மருத்துவர்களின் அறிவுரையின்படி அமெரிக்காவிக்குச் சென்று சிகிச்சை பெற்றுவிட்டு கடந்த வாரம்தான் கோவாவிற்கு திரும்பினார்.

அப்போது கோவாவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமைக்குமாறு ஆளுநரை தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.

மாநில முதல் அமைச்சர் ,மற்ற இரு அமைச்சர்களும் திரும்ப வந்து தங்கள் பணியை தொடங்குவது பற்றி திட்டவட்டமாகத் எதுவும் தெரியாத நிலையில் ஆளுநர்  உடனடியாக தலையிட்டு இப்போது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு சார்ந்த நெருக்கடியை தீர்க்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராமாகாந்த் கலாப் கடந்த 3ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

கோவாவின் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ள இந்நிலையில் முதல்வர் பாரிக்கரின்  உடல்நிலைமேலும் மோசமானதை அடுத்து நேற்று கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர்.அதனை தொடர்ந்து முதல்வரை நேரில் சென்று  நலம் விசாரித்து வந்த கோவா மாநில துணை சபாநாயகரும் பாஜக எம்எல்ஏ-வுமான மைக்கேல் லோபோ   மனோகர் பாரிக்கர் நலமுடன் உள்ளதாக கூறினார்.