செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (07:56 IST)

உலக கொரோனா பாதிப்பு 2.2 கோடி, மரணங்கள் 7.77 லட்சம்: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தினமும் லட்சக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய தகவலின்படி உலகில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,042,128 என உயர்ந்துள்ளது. மேலும் உலகில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 777,218 என்பதும் குணமானவர்களின் எண்ணிக்கை 14,785,514 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் மொத்தம் 5,612,027 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 173,716 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரேசிலில் மொத்தம் 3,363,235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 108,654 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்
 
மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 2,701,604 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 51,925 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்கா, பிரேசில், இந்தியாவை அடுத்து ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, பெரு, மெக்சிகோ, கொலம்பியா, சிலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் கொரோனா பாதிப்பில் முதல் பத்து இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது