1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vasanthakumar is in ventilator life says ks azhagiri

வெண்டிலேட்டர் மூலம் சுவாசம்: வசந்தகுமார் எம்பியின் உடல்நிலை குறித்த தகவல்

வசந்தகுமார்
தமிழகத்தில் கொரோனா வைரஸால் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்கள் உள்பட பலர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு சிலர் மட்டுமே குணமாகி வந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்த குமார் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்
 
இந்தநிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வசந்தகுமார் எம்பி அவர்களுக்கு வென்டிலேட்டர் மூலம் சுவாசம் நடைபெற்று வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இருப்பினும் வசந்தகுமார் எம்பி அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் விரைவில் குணமாகி மீண்டு வருவார் என்று தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் வசந்தகுமார் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
கடற்படை வீரரின் உயிரைக் காப்பாற்றிய செல்ல நாய்…