3000 முறை பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி


Caston| Last Modified திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (09:49 IST)
லண்டனில் 16 வயது சிறுமி ஒருவர் தான் வேலை பார்க்கும் வீட்டில் உள்ள ஆண் ஒருவரால் கடந்த 6 ஆண்டுகளாக 3000 முறை பலாத்காரம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

 
 
இந்த சிறுமி 10 வயதாக இருக்கும் போது லண்டனை சேர்ந்த கெயித் டவுடெண்ட் என்பவரின் வீட்டில் அவரது குழந்தைகளை பராமரிக்கும் வேலைக்கு சென்றுள்ளார். சிறுமியின் 10 வயதிலிருந்து 16 வயது வரை கெயித் டவுடெண்ட் தினமும் சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
 
கெயித் டவுடெண்டின் மனைவி அலுவலக வேலைகளில் தீவிரமாக இருப்பதால் இந்த கொடுமைகளை அவர் கண்டுகொள்வதில்லை. இதனால் கெயித் டவுடெண்ட் அந்த சிறுமியை தினமும் இரண்டு முறை அல்லது இரவு நேரங்களில் என இத்தனை வருடங்கள் 3000 முறை பலாத்காரம் செய்துள்ளார்.
 
சிறுமியின் மாதவிடாய் முதலிய தகவல்களை அவனிடம் சொல்ல வேண்டும் இல்லையென்றால் சிறுமியை கொடுமைபடுத்துவானாம். ஒருமுறை சிறுமி வேலை முடிந்து தனது வீட்டுக்கு சென்ற போது அவளது முதுகில் மரத்துண்டுகள் ஒட்டியிருந்தது.
 
இதனை பார்த்த சிறுமியின் தந்தை விசாரித்தபோது தான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. கெயித் டவுடெண்ட் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டிற்கு 19 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :