திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2017 (00:27 IST)

13 வயது மாணவனுடன் பாலியல் உறவு கொண்ட 44 வயது ஆசிரியை கைது

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த 44 வயது ராச்செல் கான்ஸேல்ஸ் என்ற ஆசிரியை தன்னிடம் படிக்கும் 13 வயது சிறுவனுடன் உறவு கொண்டது கையும் களவுமாக பிடிக்கப்பட்டதால் அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

13 வயது மாணவனுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பி தனியே வரவழைத்த ராச்செல் என்ற ஆசிரியை காரின் பின்சீட்டில் அந்த மாணவனுடன் உறவு கொண்டுள்ளார். இதை தற்செயலாக அந்த மாணவனின் தந்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்

காவல்துறையினர் விரைந்து வந்து ஆசிரியை செல்போனை கைப்பற்றி மாணவனுக்கு தவறான மெசேஜ் அனுப்பியதை உறுதி செய்தனர். மேலும் இந்த குற்றத்தை தான் செய்ததாக ஆசிரியையும் ஒப்புக்கொண்டதால் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது