1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 13 மே 2020 (21:11 IST)

பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்டமாக மேலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று நாட்டு மக்களுடன் பேசிய பிரதமர் மோடி, நான்காவது கட்ட பொது ஊரடங்கு வித்தியாசமாக இருக்கும் என தெரிவித்து, ரூ. 20 லட்சம் கோடிக்கு சிறப்பு பொருளாதார திட்டம் பற்றி தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் சிறப்பு பொருதாளாதார திட்டங்களை பற்றி அறிவித்தார்.

இந்நிலையில்,  கொரோனா வைரஸ்  தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும்,  பிரதமர் அலுவலகம் கூறியுள்ளத தகவலின் படி,  ரூ.2,000 கோடி வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்காகவும், ரூ.1,000 கோடி புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களின் நலனுக்காவும்,ரூ.100 கோடி தடுப்பு மருந்து ஆய்வுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்படுள்ளதாக தெரிவித்துள்ளது.