கொரோனா பாதித்த பத்தில் ஒருவருக்கு நீண்ட கால பாதிப்பு! – ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவிலிருந்து குணமானாலும் நீண்ட கால பாதிப்புகள் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் உடல்நிலை குறித்து ஸ்வீடனில் உள்ள டாண்ட்ரிக் மருத்துவமனை மற்றும் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவ பத்திரிக்கையில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர்கள் கொரோனா லேசாக பாதிக்கப்பட்டு மீண்டாலும், பாதிக்கப்பட்டவர்களில் 10ல் ஒருவருக்கு நீண்டகால பாதிப்புகள் இருப்பதாக கூறியுள்ளனர். இந்த நீண்ட கால பாதிப்பானது சுவை உணர்வின்மை, வாசனை நுகர்வு தன்மை குறைதல் மற்றும் சுவாச பிரச்சினை போன்றவையாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் மூளை சோர்வு, நினைவாற்றல் இழப்பு, தசை மூட்டு வலி, நீண்ட கால காய்ச்சல் போன்ற உடல்கோளாறுகள் இருப்பதாக கண்டறியப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.