எனக்குக் கொரோனா தொற்று இல்லை…. நடிகை அறிவிப்பு!
நடிகை அஞ்சலி தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிவித்துள்ளார்.
நடிகை அஞ்சலி இப்போது பவன் கல்யாணின் ரி எண்ட்ரி படமான வக்கீல் சாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் நடித்த நடிகை நிவேதா தாமஸூக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அஞ்சலிக்கும் கொரோனா தொற்று என சமூகவலைதளங்களில் செய்திகள் பரவின. ஆனால் அதை அஞ்சலி மறுத்துள்ளார்.