திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 9 மே 2019 (10:47 IST)

மசூதியில் குண்டுவெடிப்பு –பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு சூஃபி மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் இதுவரை 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் மசூதி அருகே காவல்துறையினரை குறிவைத்து  நேற்றுக் காலை குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் இலங்கை தேவாலயங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 253 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான், மசூதி, குண்டு வெடிப்பு, Pakistan, mosque, bomb blast