புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 7 செப்டம்பர் 2019 (20:42 IST)

சீனாவில் 10 கோடி பன்றிகள் காய்ச்சலால் சாவு: விலை உயர்ந்த பன்றி இறைச்சி

சீனாவில் பரவிய பன்றி காய்ச்சலால் பல கோடி பன்றிகள் இறந்துள்ளன. இதனால் பண்ரி கறிக்கு தட்டுபாடு ஏற்பட்டு கிடுகிடுவென விலை ஏறியுள்ளது.

சீனாவில் பன்றிகள் வளர்ப்பும், அதன் இறைச்சி விற்பனையும் தேசிய அளவில் நடந்து வரும் வியாபாரம். நமது ஊரில் ப்ராய்லர் கோழிகள் பண்ணை ஊரெங்கும் இருப்பது போல, அங்கே பன்றிகள் வளர்ப்பு பண்ணை அதிகமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களில் திடீரென்று பரவிய பன்றி காய்ச்சலால் பல பண்ணைகளில் பன்றிகள் தொடர்ந்து இறந்து போயின. மொத்தமாக 10 கோடி பன்றிகள் இறந்திருப்பதாக சீன செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீன உணவில் பன்றி கறி முக்கியமான உணவு என்பதால் தற்போது பன்றி கறிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பண்ணைகளும் பன்றிகள் இறப்பால் நஷ்டமடைந்து உள்ளன. பண்ணைகளுக்கு மானிய உதவி செய்துள்ள அரசாங்கம் பன்றி வளர்ப்பை அதிகரிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. வழக்கமாக பன்றி இறைச்சி விற்பனையாகும் விலையை விட 3 மடங்கு அதிகமான விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தட்டுப்பாடு நிலையை போக்க கிடங்குகளில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பன்றி இறைச்சியை விற்பனைக்கு கொண்டு வர சீனா முனைப்பு காட்டி வருகிறது.