1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2017 (14:34 IST)

ஒரே நாளில் 1.76 லட்சம் மின்னல்: வானிலை ஆய்வு மையம் உறுதி!!

குயின்ஸ்லாந்தில் ஒரே நாளில் 1.76 லட்சம் மின்னல்கள் தோன்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


 
 
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் ஒரே நாளில் 1,76,000 மின்னல்கள் தோன்றியது என் செய்திகள் வெளியானது. இந்த  செய்தியை ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
 
மேலும், இது போன்று மின்னல்களும் பயங்கர இடியும் தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதோடு ஆலங்கட்டி மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
இரவு முழுக்க வானத்தில் தோன்றிய லட்சக்கணக்கான மின்னல்களை புகைப்படம் வெளியாகியுள்ளது. அசாதாரண அளவில் மின்னல் தோன்றியதால் 4000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.