வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 8 ஜூலை 2020 (15:04 IST)

முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைக்க ஒப்புதல் – பிரபல தயாரிப்பாளர் தகவல்!

முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போரை அடுத்து இந்தக் கொரொனா ஒட்டுமொத்த உலகினையும் புரட்டிப் போட்டு, மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. அதே சமயம் பல லட்சம் பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர். உலகமெங்கிலும் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மற்ற துறைகளைப் போலவே சினிமாத்துறையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, 100 நாட்களாக ஷூட்டிங் நடைபெறா நிலையில் சினிமா கலைஞர்களும் , தயாரிப்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் மலையாள நடிகர்கள் சங்கம் கொரொனா காலம், முடிவடையும் வரை நடிகர், நடிகைகளின் சம்பளத்தைப் பாதியாகக் குறைக்க வலியுறுத்தியதை அடுத்து நடிகர், நடிகர்களும் ஒப்புக் கொண்டனர்.

இதுதொடர்பாக நேற்று தயாரிப்பாளர்கள் தலைமையில்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள இழப்பை சரிசெய்ய நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது

இந்நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் என்பவர், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

தமிழ்த்திரைத்துறையில் உள்ள நடிகர் , நடிகைகள்,தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளத்தை 50% குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதுய். உச்ச நடிகர்கள்  என்னிடம் பேசியுள்ளானர். இதற்குத் தயாரிப்பாளர்களும் ஆதரிக்கவுள்ளதாக மகிழ்ச்சிடன் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.