திங்கள், 15 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Webdunia

நியூஜெர்சி தேர்தலில் வென்ற இந்திய இளைஞர்

நியூஜெர்சி தேர்தலில் வென்ற இந்திய இளைஞர்
அமெரிக்காவின் நியூஜெர்சி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் இந்திய இளைஞரான ராஜ் முகர்ஜி வெற்றி பெற்றுள்ளார். மிக இளைய வயதில் பல உயரிய பதவிகளை இவர் வகித்துள்ளார்.
FILE

ஜெர்சி நகர துணை மேயராக பதவி வகித்துள்ள ராஜ் முகர்ஜி, அமெரிக்காவில் பல உயர் பதவிகளையும் வகித்துள்ளார். 29 வயதாகும் ராஜ் முகர்ஜி தற்போது நியூஜெர்சியின் 33வது மாவட்டத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளார்.

நியூஜெர்சி தேர்தலில் வென்ற இந்திய இளைஞர்
FILE
கொல்கத்தாவில் பிறந்த ராஜ், அவரது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்துவந்தார். அப்போது நிதி நெருக்கடி காரணமாக ராஜின் குடும்பத்தினர் மீண்டும் இந்தியா திரும்ப நேரிட்டது. அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ராஜ், தானே சம்பாதித்து பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் மீது தீவிரவாத தாக்குதல் நடந்த பிறகு தனது 17வது வயதில் அமெரிக்க ராணுவத்தின் 'மெரைன்' உளவுப் பிரிவிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

19 வது வயதில் சொந்தமாக தொழில் தொடங்கிய இவர் 24 வது வயதில் நியூஜெர்சி நகர வீட்டு வசதி குழும ஆணையர் மற்றும் தலைவராகவும் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது