புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By

தடுப்பூசி போட்ட இந்திய பயணிகளுக்கு நோ தடா… பணிந்தது இங்கிலாந்து!

இங்கிலாந்துக்கு செல்லும் இந்தியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்து அறிவித்திருந்தது.

இது இந்தியர்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்தது. இத்தனைக்கும் இந்தியாவில் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து அங்கிகரித்துள்ளது. இதுபற்றி பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சாதகமான பதில் வரவில்லை.

இதையடுத்து இந்தியாவும் இங்கிலாந்தில் இருந்து வருபவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவித்தது. இதையடுத்து இப்போது இங்கிலாந்து அரசு இந்திய பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் 10 நாட்கள் தனிமை தேவையில்லை என அறிவித்துள்ளது.