திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Siva
Last Updated : புதன், 29 மார்ச் 2023 (15:52 IST)

இந்த விதியை ஆதரித்தது நமது தவறுதான்: முதலமைச்சர் ஆதங்கம்..!

gst
ஜிஎஸ்டி என்ற விதிமுறையை ஆதரித்தது மாநிலங்களின் தவறுதான் என மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தபானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி என்ற புதிய விதிமுறைகளின் கீழ் வரி திட்டம் கடந்து சில ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது. ஜிஆர்டிவி வசூலை முழுவதுமாக மத்திய அரசு எடுத்துக் கொண்டு அதன் பிறகு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டியை மத்திய அரசு பகிர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சமீபத்தில் கூட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி வரி பங்கீடு கொடுத்து விட்டதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜிஎஸ்டி புதிய விதிகள் என்று மாநிலங்களிடமிருந்து டெல்லி எல்லா பணத்தையும் எடுத்துக் கொள்கிறது என மேற்குவங்க முதலமைச்சரும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார் 
 
இந்த விதி மாநிலங்களுக்கு பயனளிக்கும் என நினைத்தோம், ஆனால் தற்போது தான் இது நமக்கு பயன் அளிக்காது என்பது தெரிய வருகிறது. இதை ஆதரித்தது நமது மிகப் பெரிய தவறு என்றும் அவர் பேசியுள்ளார்.
 
Edited by Siva