1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2023 (07:46 IST)

ராகுல் காந்தி ஒன்றும் எதிர்க்கட்சிகளின் பிக்பாஸ் அல்ல.. முதலமைச்சர் ஆவேச கருத்து..!

ராகுல் காந்தி ஒன்றும் எதிர்க்கட்சிகளின் பிக்பாஸ் அல்ல என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் நிலையில் பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்து பல்வேறு கட்சி தலைவர்களிடம் உள்ளது. இதற்கான முயற்சிகளை மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், நிதீஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் இல்லாத ஒரு எதிர்க்கட்சி கூட்டணி அமைய வேண்டும் என்று பெரும்பாலான தலைவர்கள் விரும்புகின்றனர் 
 
ஆனால் பாஜகவோ ராகுல் காந்தியை எதிர்க்கட்சியின் பிரதிநிதியாக உருவாக்க முயற்சி செய்வதாக மம்தா பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். அவர் இது குறித்து கூறிய போது நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில் மக்களின் கவனத்தை திசைதிருப்ப ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகளின் ஹீரோவாக பாஜக பார்க்கின்றது என்று தெரிவித்துள்ளார். 
 
பாஜகவை எதிர்த்து போராட காங்கிரஸ் தவறிவிட்டது என்றும் காங்கிரஸ் கட்சி ஒன்றும் எதிர்கட்சிகளின் பிக்பாஸ் அல்ல என்றும் மேற்கு வங்கத்தில் இரு கட்சிகளும் ரகசிய உறவில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva