சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றது எந்த படம் தெரியுமா?

Last Updated: திங்கள், 25 பிப்ரவரி 2019 (10:03 IST)
91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் துவங்கி நடைபெற்று வருகிறது.


 
ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  ஹாலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். ஒவ்வொரு வருடமும் இந்த விருது விழாவை உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள். 
 
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக இருந்த நடிகர் கெவின் ஹார்ட் விலகியதை அடுத்து, வேறு யாரும் தொகுத்து வழங்காததால்  தொகுப்பாளர் இல்லாமலேயே இந்த விழா நடக்கிறது.
 
இதில் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது 'கிரீன் புக்' படத்திற்காக நிக் வல்லேலொங்கா, பிரியான் கியூரி, பீட்டர் ஃபாரெலி ஆகியோருக்கு வழங்கப்பட்டதையடுத்து. சற்றுமுன் 2018 ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதையும் கிரீன் புக் திரைப்படம் தட்டிச்சென்றுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :