செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 நவம்பர் 2018 (14:35 IST)

தளபதி 63-ல் முக்கிய வேடத்தில் நடிக்க பிரபல நடிகை தேர்வு

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'தளபதி 63; திரைப்படம் உருவாகவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது
 
தளபதி 63-ல் முக்கிய வேடத்தில் நடிக்க பிரபல நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   
 
இயக்குநர் பிரியதர்ஷன்  நடிகை லிஸி தம்பதியினரின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். 2013-ல் வெளியான இந்தி படமன கிரிஷ்3-ல் அசிஸ்டென்ட் புரொடக்‌ஷன் டிஸைனராக தனது சினிமா கெரியரை தொடங்கினார். தமிழில் விக்ரம் நடித்து வெளியான இருமுகன் படத்தில் அசிஸ்டெண்ட் ஆர்ட் டைரக்டராக பணியாற்றினார்.
 
சென்ற ஆண்டு நாகர்ஜுனா தயாரிப்பில் வெளியான ஹலோ என்ற தெலுங்கு படத்தில் அகில் அக்கினேனிக்கு ஜோடியாக நடித்து, கதாநாயகியாக எண்ட்ரியானார். இந்தப் படம் கல்யாணிக்கு நிறைய பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது.
 
மேலும் தற்போது பிரனவ் மோகன்லாலுடன் பெயரிடப்படாத மலையாள படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். 
 
இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் நடிகர் விஜய் - இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவாகும் தளபதி 63-ல் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறாராம் கல்யாணி. இவ்ரின் கதாபாத்திரத்தை ரகசியமாக வைத்திருக்க முடிவெடுத்திருக்கிறதாம் படக்குழு.