1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 நவம்பர் 2018 (16:34 IST)

மீடூ: பிரபல நடிகையின் பின்புறத்தை தட்டி விளையாடிய வாலிபர்

நடிகை ராதிகா ஆப்தே தனது பின்புறத்தை திடீரென தெரியாத நபர் ஒருவன் தட்டிவிட்டு ஓடிவிட்டான் என்று பரபரப்பான மீடூ குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
 
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். 
 
தமிழில் கார்த்தியின் ‘அழகுராஜா’ படத்தில் அறிமுகமானார். ரஜினிக்கு ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்தார். ராதிகா ஆப்தே அந்தப் படத்திற்குப்பிறகு தமிழ் சினிமாவில் பிரபலமானார். 
 
மீ டூ இயக்கம் வருவதற்கு முன்பே சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி குரல் கொடுத்தவர் நடிகை ராதிகா ஆப்தே. 
 
இந்நிலையில் தற்போது மீடூ இயக்கம் பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘‘நான் மீ டூ இயக்கத்தை ஆதரிக்கிறேன். பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தலை எந்த விதத்திலும் பொறுத்துக் கொள்ள முடியாது. 
 
பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பகிரங்கப்படுத்துவதும் அவர்களுக்கு ஆதரவாக சமூகத்தில் குரல்கள் எழுவதும் ஆரோக்கியமான ஒரு வி‌ஷயம். 
 
ஆனால் மீடூ வி‌ஷயத்தை பொறுத்தவரை புகார் கூறும் பெண்களிடம் ஆதாரம் கேட்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
 
ஆதலால் இதுபோன்ற வி‌ஷயங்களில் எப்போதும் பெண்களால் ஆதாரத்தை சேகரித்து கையில் வைத்துக்கொண்டு குற்றம் சாட்ட முடியாது. 
 
ஒருமுறை என்னுடைய பின்புறத்தை ஒருவன் தட்டிவிட்டு ஓடிச்சென்றான். பிறகு 20 நிமிடங்களில் நான் அதை மறந்துவிட்டேன்.
 
அதை நான் மறந்தாலும் இன்றும் என்னை சுற்றியிருப்பவர்கள் அதை ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்’’ அந்த சம்பவம் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றார் நடிகை ராதிகா ஆப்தே.