செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. மகளிர் தினம்
Written By சினோஜ் கியான்
Last Updated : திங்கள், 16 மார்ச் 2020 (15:02 IST)

மகளிர் தினம் : சாதனைப் பெண்கள் சிறப்பு கட்டுரை !

மகளிர் தினம் : சாதனைப் பெண்கள் சிறப்பு கட்டுரை !

இயற்கையின் படைப்பில் சகல உயிரினங்களும் எல்லாமும் வல்ல ஆற்றலும் தனித்தன்மையும் கொண்டு இவ்வுலகில் இயங்கி வருகின்றது. டார்வின் தியரியின் படி இவ்வுகம் குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து, ஹோமோ சேப்பியன்ஸில் இருந்து மனிதன் என்ற பரிமாணத்தை அடைந்து  இன்று உலகையே கையில் வைத்து விண்ணையும் தனது அறிவெனும் விஞ்ஞான அறிவியல் தொழில்நுட்பத்தின் பிடியில் வைத்து அரசாள எண்ணி நிதம் நிதம் கணம் தோறும் பல்வேறு விதமாக யோசித்துக் கொண்டிருக்கிறான்.
 
அப்படிப்பட்ட இந்த உலகில் மனிதனைப் படைக்கும் சக்தி சொரூபமாக கண்ணில்பட்ட தெய்வமாகவும் வாழும் கடவுளாகவும் நம் முன்னர் பெண்கள் இருக்கின்றார்கள். ஒரு பிள்ளையைப் பெற்று வளர்த்தெடுப்பதில் ஒரு பெண்ணுக்கு உள்ள ஆத்மீகத் தொடர்பை நினைத்தால் அவளது உயிரைப் பாலாகக் பச்சிளம் குழந்தைக்குக் கொடுப்பதைப் போன்று அவளது தன்னம்பிக்கை,புன்னகை எல்லாவற்றையும் பிள்ளைக்கும், கணவருக்கும், சகோதரன், சகோதரனுக்குக்  கொடுத்துவிட்டு, மனதுக்குள் எதையும் அனுசரித்துக் கொண்டு போவதைப்போன்று நிதானமாக இவ்வுலகில் தன் சோகத்தை முந்தனையில் முடிச்சிட்டுவைத்திக்கொண்டு வாழ்வில் தன்னையும், தன் குடும்பத்தினரையும் தன்னைச் சேர்ந்தோரையும் முன்னேற்ற அநுதினமும் இயந்திரமாக உழைத்து உயர்ந்தோங்கிவருகிறார்கள். 

உலகிற்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறார்கள் !
 
அவர்களின் வாழ்க்கைப் படிநிலைகளை நாம் தெரிந்துகொண்டாலே அது மனதில் உற்சாக டானிக்காக இனிக்கின்ற ரகமாகும்.
 
பழங்காலத்தில், பெண்களை வீட்டுப்படி தாண்டவிடாத இந்தச் சமூகம் இன்று விண்ணில் வெற்றிக் கொடிநட்டு, ஆண்களைவிட அதிக நாட்கள் விண்ணில் தங்கிக்காட்டுகிற அளவுக்கு மனோதைரியத்தையும், விடாமுயற்சியையும், நினைத்ததைச் சாதிக்கின்ற வல்லமையும் , உடல்வலிமையும் வாய்த்திருக்கிறது என்பதை நினைத்தால் மனதில் பெருமை பொங்குகிறது.
 
நாட்டில் முதல் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி, இரக்கத்தில் வடிவம் கருணையின் தாய் அன்னை தெரசா போன்றவர்களின் உழைப்பையும் அவர்கள் தங்கள் தன்முனைப்புடன் இந்த உலகில் பெண்மையை உயர்த்திப் பிடித்த காலத்தையும் இப்போதுள்ள காலத்தையும் நம்மால் ஒப்பு நோக்க முடியாவிட்டாலும்,  பாரதியாரின் மனைவி செல்லம்மா எப்படி ஒரு மகா கவிக்கு தனிப்பெருந்துணையாய் இருந்தாரோ அதேபோல் இவ்வுலகிற்கு ஓவ்வொரு பெண்களும் ஆணின் வளர்ச்சிக்கு அவனது வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள்.
 
சிங்கப் பெண்கள்   அவர்கள் பிரசவ வலியையைத் தாங்குகின்ற அவர்களின் சுகமான இன்னல் தருணத்தை  நாம் மனதால் உணர்கின்றபோதுதான் அதன் பெருமையை கர்வத்துடன் புரிந்துகொள்ள முடியும்!
 
அது மானிட உலகிற்கு இயற்கையும் இறைவனும் ஒருசேர ஒருமித்த குரலுடன் பெண்ணிற்கு அளித்த பெரும்பேறுகாலம் அது. 
 
’ஆணுக்கு இங்கு பெண் இளைத்தவறில்லை’ என்பதை இந்தப் போட்டி உலகில் கண்டோம். இன்னும் கார்க்கி, மைத்ரேகி, அவ்வையார், காரைக்கால் அம்மையார் , சரோஜினி நாயும், செல்வி ஜெயலலிதா, பாத்திமாபீவி, தெலுங்கான கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் போன்ற எத்தனையோ பெரும் ஆளுமைகள் இன்னமும் இந்த சமூகத்திற்கு பெரும் ஊக்க சக்திகளாகவும், ஏனைய பெண்களுக்கு ஆகச்சிறந்த கிரியா ஊக்கிகளாகவும் இருந்து வழிநடத்திவருகிறார்கள். 
 
அத்தையையோர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கூட சிறந்த முன்மாதிரிகளாகவே கண்களுக்குத் தெருகிறாகள். ஏனேன்றால் எத்தனையோ பெரிய நட்சத்திரப் பிரபலங்கள் நடிகர்கள்,அரசியல் ஆளுமைகள் தமிழக அரசியலில் காலூன்ற தடுமாறிக்கொண்டிருந்த சமயத்தில் திருமணம் புரியாமல் செல்வி ஜெ. ஜெயலலிதா என்ற ஆளுமை எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் முத்திரை பெற்ற தலைவராகி அதிமுக என்ற கட்சியின் ஒற்றைத் தலைவியாக பல லட்சம்மக்களின் மனதில் அம்மாவாக பிரதிபலிக்கிறார்கள் என்பது கண்கூடு. 
 
அவர், இருமுறை தொடர்ந்து முதல்வராகி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் போலவே சாதைப் படைத்துள்ளார். அதுவும் தமிழகத்தில் வேறு எவரும் செய்யாத சாதனையே ஆகும்.இந்திய அரசியலில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஜெயலலிதா, மாயாவதி, நடிகை ரோஜா, சோனியா காந்தி, சுஷ்மா சுவராஜ், போன்ற தலைவர்களை தவிர்த்துவிட்டு அரசியல் சரித்திரம் எழுத முடியாது.
 
அதேபோல், இந்தியப்  பெண்கள் கிரிக்கெட் கேப்டன்  மிதாலி ராஜ், 16 வயதிலேயே சச்சினைப் போல் உலகப் பெண்கள் கிரிக்கெட் அரங்கில் ராஜபாட்டை செய்திவரும் வீராங்கனை ஷஃபாபி வர்மா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சாய்னாநேவால், பிவி சிந்து, பல உலகச் சாம்பியன்சிப் பட்டங்களை தன்வசம்படுத்திய மேரிகோம் ஆகியவர்களும் இந்தியா உலகத்தரத்தில் சாதனைப் படைத்துவருவதற்கு உதாரணமாகக் கூறலாம்.
 
ஆண்கள் கோலோச்சிக் கொண்டிருந்த சினிமாவி இன்று, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, கரின்னா கபூர், கத்ரினா கைப், தீபிகா படுகோனே, கங்கனா ரனாவத் , வித்யா பாலன், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா, அனுஷ்கா ஷெட்டி,  போன்ற சிறந்த நடிகைகள்  சிறப்புடன் செயல்பட்டு ஆண்களுக்கு நிகராகப் இதே துறையில் புகழ்பெற்று விளங்கிறார்கள். 
 
இப்படி இன்று, விவசாயம், தொழிற்சாலை, ஏற்றுமதி, அழகுதுறை,அரசியல்,  நகை வடிவமைப்பு, சமூக வலைதளம், கார்ப்பரேட் உலகம், விமானம், விளையாட்டு,சினிமா, விண்வெளி, ராணுவம், காவல்துறை, கப்பல்துறை,  போன்ற எல்லாவகைத் துறையிலும் மகளிரின் பங்களிப்பு என்பது உலகிற்கு மழையைப் போன்று அளப்பரியதாக உள்ளது. 
 
எனவே மகளிர் தினத்தில் அவர்களுக்கு நாம் நமது வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் பெருமிதம்  அடைவோம்.
 
-சினோஜ்கியான்