வியாழன், 14 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

இட்லி மிருதுவாக வரவேண்டுமா?; இந்த முறையை பின்பற்றுங்கள்....

காலை உணவுக்கு ஏற்றது இட்லி. எல்லோர் வீட்டிலும் இட்லி சாஃப்டாக இருப்பதில்லை. நமக்கே கூட ஒரு சில நாட்கள் மிருதுவாகவாகவும், சில நாட்கள் கல் போன்றும் இருக்கும். எப்போதும் ஒரே மாதிரியான மிருதுவாக இட்லி வர என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்..
 
தேவையான பொருட்கள்:
 
புழுங்கல் அரிசி - 4 தம்ளர்  
உளுந்து - 1 டம்ளர்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்  
உப்பு - தேவையான அளவு

 
செய்முறை:
 
முதலில் தரமான அரிசி மற்றும் உளுந்தை பயன்படுத்தவேண்டும். அதன் பின் உளுந்து, அரிசி இவற்றை மூன்று மணி முதல் 5  மணி நேரமாவது ஊற வைக்கவும். பிறகு உளுந்தை கழுவி, வெந்தயத்துடன் சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும். மிக்ஸியில்  அரைப்பதை விட கிரைண்டரில் அரைத்தால் தான் இட்லி மிருதுவாக கிடைக்கும். அவ்வப்போது தண்ணீர் விட்டு அரைத்து  எடுக்கவும்.
 
பிறகு அரிசியை அரைத்து அதனுடன், கல் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். அரிசி ரவை பதத்தை விட சற்று மைய  அரைப்பட வேண்டும். அரிசி அரைக்கும் போது அன்று வடித்த சாதத்தை கால் கப் சேர்த்து அரைத்தால் மிக மிருதுவான இட்லி  கிடைக்கும். உளுந்து நன்கு மையாக அரைபட வேண்டும். மாவை வழித்தெடுக்கும் போது பஞ்சு போல பந்து பந்தாக  வரவேண்டும்.
 
இப்படி அரைக்கப்பட்ட அரிசி மற்றும் உளுந்தை ஒரு பாத்திரத்தில் வழித்தெடுத்து இரண்டு மாவைவும் கைகளால் நன்கு கலந்து,  இரவு முழுவதும் புளிக்க விடவும். காலையில் புளிக்க வைத்துள்ள மாவை அப்படியே எடுத்து, இட்லித் தட்டுக்களில்  மென்மையான வெள்ளைத் துணி போட்டு அதன் மீது ஊற்றவேண்டும்.
 
இவ்வாறு செய்வதால் மிலவும் வெண்மையான மற்றும் மிருதுவான இட்லியை பெறலாம்.