வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

தக்காளி குருமா

தக்காளி குருமா

தேவையான பொருள்கள்:
 
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி 
மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு
கொத்த மல்லி - சிறிதளவு
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது   
 
அரைக்க தேவையான பொருட்கள்:
 
தேங்காய் துருவல் - 2 துண்டு
சின்ன வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 3
பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 ஸ்பூன்
முந்திரி - 5


 
 
செய்முறை:
 
* தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
 
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
 
* அடுப்பில் கடாயை வைத்து ஒரு எண்ணையை ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும்  கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து வதக்கவும். 
 
* பச்சை வாடை போனதும் தக்காளியை போட்டு வதக்கவும். நன்கு சுருள வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் மற்றும் மிளகாய் பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
 
தக்காளி வதக்கும்போது தண்ணீர் விடுவதால் தண்ணீர் சேர்க்க தேவை இல்லை. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இறுதியில் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி கொத்த மல்லி தழையை தூவி விடவும். சுவையான தக்காளி குருமா ரெடி. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.