திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

மசாலா மோர் செய்ய வேண்டுமா....

தேவையானவை: 
 
தயிர் - 500 மில்லி
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
தண்ணீர் - ஒரு லிட்டர்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

 
 
செய்முறை: 
 
கொத்தமல்லி இலை, தோல் நீக்கிய இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.  தயிரில் தண்ணீர் விட்டு கடைந்து மோராக்கவும். இந்த மோரில், அரைத்த விழுதை சேர்த்துக் கலந்து 10 நிமிடம் மூடி  வைக்கவும். பிறகு, வடிகட்டி எடுத்து பரிமாறவும்.
 
குறிப்பு: 
 
வெயில் காலத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இந்த மசாலா மோர் கொடுத்து உபசரிக்கலாம். இதை ஃப்ரிட்ஜில்  வைத்தும் கொடுக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் ஒரு அற்புத பானம் இந்த மசாலா மோர். நீங்களும் சுவைத்து பார்த்து  ருசித்துடுங்கள்.