1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Updated : புதன், 20 ஜூலை 2022 (16:38 IST)

உருளைக்கிழங்கு பசலைக்கீரை சப்பாத்தி செய்ய !!

Potato Pasalai Keerai Chapathi
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்
உருளைக்கிழங்கு - 1
பசலைக்கீரை - 1/2 கட்டு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப



செய்முறை:

உருளைக்கிழங்கையும், பசலைக்கீரையும் தனித்தனியாக வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

ஒருபாத்திரத்தில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, பசலைக்கீரை, கோதுமை மாவு, மிளகாய் தூள், உப்பு, கரம்மசாலா தூள், சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக திரட்டி வைக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான சத்தான உருளைக்கிழங்கு பசலைக்கீரை சப்பாத்தி தயார்.