செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

எளிமையான முறையில் வத்த குழம்பு செய்ய...!

தேவையான பொருள்கள்:
 
சுண்டைக்காய் அல்லது மணத்தக்காளி வத்தல் - 1 மேஜைக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
 
வறுத்து அரைக்க தேவையான பொருள்கள்:
 
மிளகாய் வத்தல் - 2
கொத்தமல்லி - 2 மேஜைக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
அரைக்க -
தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 3
 
தாளிக்க தேவையான பொருள்கள்:
 
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
 
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு எல்லாவற்றையும் போட்டு வறுத்துக் கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து கருக  விடாமல் வறுத்து ஆற வைக்கவும். ஆறிய பிறகு வறுத்த பொருட்களோடு சீரகத்தையும் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
 
தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். புளியை 50 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளிக்  கரைசல் மற்றும் 200 மில்லி தண்ணிர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக  கொதிக்க விடவும்.
 
மசாலா வாடை போனதும் தேங்காய் கலவையை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
 
 அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும்.  கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் சுண்டைக்காய் வத்தல், வெந்தயம் போட்டு தாளித்து குழம்பில் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். சுவையான வத்தக்குழம்பு தயார்.