அவல் வேர்க்கடலை பக்கோடா...

அவல் வேர்க்கடலை பக்கோடா...


Sasikala|
தேவையான பொருட்கள்:
 
அவல் - 200 கிராம்
கடலை மாவு - 100 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
வறுத்த வேர்க்கடலை - 50 கிரால்
மிளகாய்த்தூள் - 1 மேஜை கரண்டி
பெருங்காயம் - 1 மேஜை கரண்டி
சமையல் சோடா உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - 1/4 லிட்டர்
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் நறுக்கியது - 2

 
 
செய்முறை:
 
அவலை சுத்தம் செய்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையையும் அரிசிமாவு, கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், பெருங்காயம், சமையல் சோடா, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். 
 
அடிப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்தமாவை கிள்ளிப்போட்டு, கரகரப்பாக பொரிந்ததும் எடுத்தால் அவல் வேர்க்கடலை பக்கோடா ரெடி. நல்ல மொரு மொருவென்று இருக்கும் இவை மாலை வேளைக்கு சிறந்த சிற்றுண்டியாக இருக்கும்.
 


இதில் மேலும் படிக்கவும் :