சுவை மிகுந்த ஆலு பன்னீர் மசாலா செய்ய !!

Aloo Panneer masala
Sasikala|
தேவையான பொருட்கள்:
 
உருளைக்கிழங்கு - 3
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பன்னீர் - 200 கிராம்
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 2
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
தக்காளி - 3
ஏலக்காய் - 3
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிது
கரம்மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பன்னீரை சிறுத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
பச்சை மிளகாயை கீறி வைக்கவேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம்  சேர்த்து நன்கு வதக்கவும்.
 
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள்,  சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
 
அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட்டு பன்னீர், உருளைக்கிழங்கு, உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்துக் கிளறி அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவேண்டும். உருளைக்கிழங்கு வெந்ததும் கரம்மசாலா தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :