செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 27 மே 2022 (16:58 IST)

ஆரோக்கியம் உள்ள முடக்கத்தான் கீரை தோசை செய்ய !!

Mudakathan Keerai Dosai
தேவையான பொருட்கள்:

முடக்கத்தான் கீரை - 2 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
உளுந்து - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு



செய்முறை:

முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம், துவரம்பருப்பு ஆகிவற்றை ஒன்றாக சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் அரைக்கவும். இவற்றை அரைத்துக் கொண்டிருக்கும்போதே நன்கு சுத்தம் செய்து நறுக்கிய முடக்கத்தான் கீரையையும் சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும்.

இதன் பிறகு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்து வைக்கவும். இதை 7 மணி நேரம் புளிக்க வைத்துக்கொள்ளவும். மாவு தோசைக்கு தயாரானதும், தோசை கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மாவு விட்டு, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.

இந்த அருமையான தோசையோடு பூண்டு மிளகாய்ப் பொடி சேர்த்து சுவைத்து மகிழவும்.

குறிப்பு: முடக்கத்தான் கீரையின் துவையலை நம்முடைய உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.